பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டாலின் கே.எஸ்.அழகிரி சந்திப்பு!

சென்னை (18 ஜன 2020): பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தியுடன் வெளியிட்ட கருத்து மற்றும் அதனைத் தொடர்ந்து தலைவர்களின் வார்த்தை மோதல், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவியது.

இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் இன்று மதியம் அண்ணா அறிவாலயம் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, “திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதற்கு பிறகும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும். கூட்டணியில் ஆரோக்கியமான விவாதம் வந்து செல்லும்.

இனி கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் எழுந்தால் நானும் மு.க.ஸ்டாலினும் பேசிக்கொள்வோம். மற்றவர்கள் யாரும் பேசத் தேவையில்லை” என்றார்

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...