துக்ளக் விழாவில் பேசியதற்கு அவுட் லுக் தான் ஆதாரமா? – ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி!

Share this News:

சென்னை (21 ஜன 2020): “பெரியார் குறித்து துக்ளக் விழாவில் பேசியதற்கு ரஜினி அவுட் லுக்கை ஆதாரமாக காட்டியது ஏன்?” என்று கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மேலும் ரஜினி வீடு முற்றுகை இடப்படும் என பெரியார் அமைப்புகள் தெரிவித்துள்ளன. திக தலைவர் கி.வீரமணி, “ரஜினி தவறாகப் பேசியதற்குத் தக்க விலை கொடுத்தாக வேண்டும்!” என தெரிவித்துள்ளதோடு, “ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்!” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, outlook பத்திரிகையின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே பேசினேன், எனவே மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்தார்.

இந்நிலையில், “தான் பேசியதற்கு ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்?” என்று நடிகர் ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “1971-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடாத சமயத்தில், படத்துடன் செய்தி வெளியிடும் துணிவு துக்ளக்கிற்கு மட்டுமே இருந்தது என்று பேசிய ரஜினிகாந்த், தான் பேசியதற்கு ஆதாரமாக அந்த துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Share this News:

Leave a Reply