பாஜகவில் குஷ்பு புறக்கணிப்பு!

சென்னை (14 டிச 2020): பாஜகவில் குஷ்பு மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

பல கட்சிகளில் இருந்து விட்டு கடைசியாக காங்கிரஸிலிருந்து பாஜகவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நடிகை குஷ்பு, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கட்சியில் இணைந்தார். ஆனால் இதுவரை அவரை அக்கட்சியினர் ஒருவர் கூட மதித்ததாக தெரியவில்லை.

திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தி அதில் அவர் பேசிய வீடியோ சினிமாவில் நடிப்பதுபோல் டேக் கட் சொல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி கேலிக்கு ஆளானார்.

இது இப்படியிருக்க தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. எல் முருகன் வெளியிட்டுள்ள பட்டியலில் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஷ்பு பெயர் இல்லை.ல் இதனால் குஷ்பு பாஜகவில் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. மேலும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு குஷ்பு மேல் இன்னும் நம்பிக்கை பிறக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...