அத்தியாவசிய பொருட்களுக்கே தட்டுப்பட்டு – இதில் இதன் விலை ஏற்றத்தால் குடிமகன்களுக்கு கவலை!

Share this News:

சென்னை (06 மே 2020): மது கடைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் மதுபானங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருக்‍கும் டாஸ்மாக்‍ மதுபானக்‍ கடைகள் நாளை முதல் திறக்‍கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது திடீரென மதுபானம் விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்‍கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரி 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டதால், தமிழகத்தில் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லியில் அனைத்து வகை மதுபானங்களும் 70 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது. இதேபோல், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்‍ கடைகள் திறக்‍கப்படும் நாளை குடிப் பிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்‍கியிருக்‍கும் நிலையில், இந்த விலை உயர்வு அவர்களை அதிர்ச்சிக்‍குள்ளாக்‍கி இருக்‍கிறது.


Share this News: