திமுக மங்கிப் போய்விட்டது – அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கருத்து!

126

மதுரை (10 செப் 2020): திமுக அந்த காலத்தில் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான வேளாண் அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மதுரை வேளாண்மை கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:

இன்றைக்கு முதல்வரும் துணை முதல்வரும் இந்தத் தொற்றுநோய் காலத்திலும் கடுமையாக உழைத்து மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு வழங்கி தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு அதன்மூலம் தமிழகத்தில் தொற்றுநோய் உள்ள 85 சதவீத நபர்களை குணப்படுத்தியுள்ளனர்.

திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியபோது, கடந்த 5 மாதங்களாக நாம் எந்த வேலையும் செய்யவில்லை அதை எல்லாம் சேர்த்து தற்போது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இதன் மூலம் அவர் மக்களுக்கு கடந்த 5 மாதங்களாக எந்த வேலையும் செய்யவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  விடுதலைக்கு தயாராகும் சசிகலா!

8 மாதங்கள் இல்லை எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. காலத்துக்கு ஏற்ப மக்கள் தேவை அறிந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிந்து கொள்கைகளை வகுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் அதை செய்யவில்லை. திமுக ஆதிகாலத்தில் உள்ளது போல் செயல்பட்டு வருகிறது. திமுக வளர்ச்சியடையவில்லை பின்தங்கி மங்கிப் போய் உள்ளது தேர்தல் 8 மாதத்துக்குள் வரும். தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி உறுதி.”

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.