முகக்கவசம் இல்லை, சமூக இடைவெளி இல்லை – ஆயிரக்கணக்கானோர் புடைசூழ நடந்த அமைச்சர் வீட்டு திருமணம்!

Share this News:

கோவை (12 ஜூன் 2020): கொரோனா விதிமுறைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ அமைச்சர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமணம் அமர்க்களமாக அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோலார்பட்டியை சேர்ந்தவர் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் ஜெயபிரனிதா, பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயகுமாரின் மகன் ஆதித்யன் ஆகியோருக்கு, கோலார்பட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது.

கொரோனா விதிமுறைகளைப் பற்றி கவலைப் படாமல் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர்.

அரசுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் என கூட்டம் அலைமோத .தென்னந்தோப்பில், விருந்தினர்களுக்கு தனி பந்தல் அமைத்து, ‘பபே’ முறையில் உணவு பரிமாறப்பட்டது. சமையல் செய்வதற்கு, தனி கூடம் அமைந்து, இரு நாட்களாக சமையல் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், பிரமாண்டமாக திருமணம் நடந்தது.பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியவில்லை; சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.

தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகம் கொரோனா பரவல் உள்ளது. ஆனால் அங்கிருந்து ஏராளமானோர் திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்கிற நிலையில் அமைச்சர் வீட்டு திருமணத்தில் ஆயிரக்கானோர் பங்கேற்று அதிர வைத்துள்ளனர்.

கொரோனா பரவல் இல்லாத ஆரம்ப நேரத்தில் கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத்தினரை குறிவைத்து குற்றம் சுமத்திய அரசு இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கு என்ன பதிலளிக்கப்போகிறது? என கேள்வி எழுப்புகின்றனர். சமூக ஆர்வலர்கள்.


Share this News: