அப்பாவின் மொபைலில் ஆபாச படம் – சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

திருச்சி (30 மே 2020): திருச்சி அருகே அப்பாவின் மொபைல் போனில் உள்ள ஆபாச படம் 14 வயது சிறுவனை கொலைகாரனாக்கியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் ச் சேர்ந்த ராஜாங்கம் – லலிதா தம்பதிக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் மூன்றாவது மகள் பெயர் கண்மணி ( மாற்று பெயர் ). கண்மணி அப்பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்மணி தனது வீட்டு பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.

அதனைக்கண்ட பெற்றோர் தலையில் பலத்த காயமடைந்த மகளை மீட்டு அவசர அவசரமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமியை யாரோ தொடர்ச்சியாக பலமாக தாக்கியுள்ளதாகவும், இதனால் அதிக ரத்தம் வெளியேறி இறந்ததாகவும் மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிருஷ்ணசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது சம்பவ இடத்தில் ரத்த கரையுடன் இருந்த சட்டையை வைத்து விசாரித்ததில், அது அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுவனின் சட்டை என தெரிந்தது.

அதையடுத்து சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகின. அதாவது, சிறுவன் தனது தந்தையின் செல்போனை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளான். அப்போது, அதிலிருந்த ஆபாச வீடியாக்களை யாருக்கும் தெரியாமல் பார்த்து வந்துள்ளான். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் செல்போனில் ஆபாச படத்தை பார்த்துக்கொண்டிருந்த போது, கண்மணி அதை கவனித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியுடன் சிறுவன் தவறாக நடந்துகொள்ள வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனிடம் இருந்து தப்பியோடிய சிறுமி சம்பவத்தை வீட்டில் தெரியப்படுத்தி விடுவாளோ என்ற பயத்தில் அச்சிறுவன் கல்லால் ஐந்து, ஆறு முறை தலையிலேயே அடித்துவிட்டு தப்பியுள்ளான். இதனால் பலத்த காயமடைந்த சிறுமி உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிறுவன் மீது போக்சோ வழக்கை பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்

ஹாட் நியூஸ்: