அனைவரையும் சிலிர்க்க வைத்த மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏவின் கோரிக்கை!

Share this News:

சென்னை (27 ஆக 2021): பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது வைத்த கோரிக்கை அனவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழக அரசு பல காலமாக மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல இலவச திட்டங்களை வகுத்து செயல்படுத்தியும் வருகின்றன.

இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் வைத்த கோரிக்கை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் வைத்த கோரிக்கைகளின் பட்டியல் பின்வருமாறு

1.தொடர்ந்து பள்ளிகளில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். இதனை களைய அனைத்து பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்பு கொள்கை உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்த வேண்டும்.குழந்தை பாதுகாப்பு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

மேலும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இதனை நடைமுறைப்படுத்த கூறியுள்ளது. நமது அண்டை மாநிலங்களில் குழந்தை பாதுகாப்பு கொள்கையை அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தி உள்ளன. எனவே வருகிற கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்பு கொள்கையை(Child Protection Policy in all Schools) உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் .

2 .நமது அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பீடுகளை கலாச்சாரமாக்க அரசமைப்பு உரிமை கல்வியை (Constitution Rights Education) அனைத்துப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

3. அனைத்துப் பள்ளிகளிலும் முழு நேர மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். என்கிற 3 கோரிக்கைகளை வைத்துள்ளார்.

அவரின் இந்த கோரிக்கை குழந்தைகள் நல ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளனர்.


Share this News:

Leave a Reply