யானைகளின் மர்ம மரணங்கள்!

Share this News:

கடந்த இரண்டு மாதங்களில் தென் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் ஏறத்தாழ 350 யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

ஒகாவாங்கோ டெல்டாவில் 350 க்கும் மேற்பட்ட யானையின் உடல்கள் கண்டறியப்பட்டுளளதாக டாக்டர் நியால் மெக்கான் தெரிவித்தார். யானைகள் இறந்ததற்கான காரணம் யாருக்கும் இதுவரை தெரியவில்லை. ஆய்வக பரிசோதனையின் முடிவுகள் இன்னும் சில வாரங்களில் தெரிய வரலாம் என அரசு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள யானைகளில் மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான நேஸனல் பார்க் ரெஸ்க்யுவின் டாக்டர் மெக்கான், “வறட்சியற்ற ஒரு காலத்தில் இறந்துள்ள யானைகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிகமாக உள்ளது” என்றும், வேட்டையாடுபவர்கள் கொல்வதற்காக பயன்படுத்தப்படும் சயனைட் காரணமாக இருந்தால் மற்ற விலங்குளும் இறந்திருக்க வேண்டும், ஆனால் யானைகள் மட்டுமே இறந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


Share this News: