தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்!

Share this News:

புதுடெல்லி (13 ஜன 2020): தமிழக பா.ஜனதா தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட இருப்பதாக கட்சியின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னான பிறகு புதிய தலைவராக எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்பட பலருடைய பெயர்கள் அடிபட்டன. சமீப காலமாக மாநில துணைத்தலைவர்கள் கருப்பு முருகானந்தம், குப்பு ராமு, நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இவர்களில் யாருக்கு மாநில தலைவர் பதவி வழங்கலாம் என்பது குறித்து பா.ஜனதா மேலிடம் பரிசீலனை செய்தது. இதில் மூத்த நிர்வாகியான குப்பு ராமுவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் ஒன்றின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு, அதை சார்ந்த கருப்பு முருகானந்தத்தை நியமிக்கலாம் என்று கட்சி மேலிடம் கருதியது. இந்த நிலையில், அதே சமுதாயத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமிக்கலாம் என்று கட்சி மேலிடத்துக்கு தமிழக பா.ஜனதாவின் முக்கிய மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இன்றைய நிலவரப்படி தமிழக பா.ஜனதா தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட இருப்பதாக கட்சியின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர். அரசியலில் பிரபலமானவர். தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply