அமமுக, அதிமுக இணைப்பு – எடப்பாடிக்கு கல்தா: சசிகலா வருகைக்குப் பிறகு டிவிஸ்ட்!

Share this News:

சென்னை (30 ஜன 2021): சசிகலா விடுதலையாகியுள்ள நிலையில் அமமுக, அதிமுக மீண்டும் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனை இன்றைய நமது எம்ஜிஆர் கட்டுரையும் தெளிவுபடுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், கொரோனா பாதிப்பால் பெங்களூருவிலுள்ள விக்டோரியா அரசு மருத்துமனையில் தொடர் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இந்தநிலையில், சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப உள்ளநிலையில், எடப்பாடி பழனிசாமியையும், பா.ஜ.கவையும் கடுமையாக சாடி நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் கட்டுரை வெளியாகியுள்ளது.

அந்த கட்டுரையில், ‘எத்தனை தீயசக்திகளோடு சேர்ந்து துரோகக் கூட்டங்கள் தீட்டினாலும் அவை புஸ்வாணம் ஆகிவிடும். பதவிக்கு வரும் வரை மண்டியிட்டு, கைகட்டி, சரணாகதி அடைந்து நிற்பதும், பதவி கிடைத்து விட்டதும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும்.

சீண்டுவார் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமர வைத்தவருக்கு காட்டும் விசுவாசும் இது தானா ?

சசிகலாவை அ.தி.மு.கவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்பில்லை என மனசாட்சியை விற்றுவிட்டு, நன்றி கெட்ட மனிதராக வலம் வருபவர்களுக்கும் உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்யும் துரோகிகளும் சரித்திரத்தில் நம்பிக்கை துரோகிகள், பச்சோந்திகள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள்.

தனியாக நின்று டெபாசிட் வாங்க கூட யோக்கியதை இல்லாத பச்சோந்தி கூட்டங்கள் ஆணைப்போட்டு தடுத்தாலும், உங்களால் கோட்டை ஏறமுடியாது.

அதோடு, பதவி வெறி, பேராசைகளை விடுத்தும், ஆணைகளை உடைத்தெறிந்தும் தொண்டர்கள் எதிர்ப்பார்க்கும் முடிவினை எடு; சுயமாக சிந்தனை செய். சின்னம்மாவை ஒரு சேர கூடி வரவேற்போம்.”

இவ்வாறு அ.தி.மு.க, அ.ம.மு.க இணைப்பிற்கு நமது எம்.ஜி.ஆர் நாளேடு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply