சுவர் இடிந்து விழுந்த நெல்லை பள்ளிக்கு தவறான சான்றிதழ் – அதிர்ச்சித் தகவல்!

நெல்லை (20 டிச 2021): நெல்லை பள்ளி கழிவறைச் சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் பள்ளி கழிவறைக்கு உறுதித் தன்மை குறித்துச் சான்றிதழ் வழங்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை டவுன் பகுதியில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் 17-ம் தேதி கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இச்சம்பவம் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

சம்பவம் தொடர்பாக பள்ளியின் செயலாளர், தலைமை ஆசிரியை, கட்டட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளிக்கு முறையான உறுதித் தன்மைக்கான சான்றிதழ் வாங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதனால் அந்த சான்றிதழ் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நெல்லை பள்ளியில் நடந்த துயரச் சம்பவத்துக்கு அனைத்து துறைகளின் அதிகாரிகளுமே பொறுப்பு என்பதால் நெல்லை கோட்டாட்சியர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் கொடுத்த சான்றிதழ் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

ஹாட் நியூஸ்: