வங்கக்கடலில் இன்று உருவாகும் அசானி புயல்!

Share this News:

சென்னை (21 மார்ச் 2022): தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து இன்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளது.

அசானி புயலால் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், மற்றும் புதுவையின் ஒரு சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசானி புயல் காரணமாக மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அசானி புயல் காரணமாக பலத்த மழை, சூறாவளி காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபர் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை வரை மூடப்பட்டுள்ளது. அந்தமான் நிர்வாகம் சார்பில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.


Share this News:

Leave a Reply