ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை இல்லை!

சென்னை (06 ஜூலை 2020): நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பிய, சாத்தான்குளம், காவல்நிலைய இரட்டைக் கொலை தொடர்பாக, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது விரல்கள் நீண்டதால், அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தடை வித்திக்கப்பட்ட நிலையில், சென்னையில் அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்படவில்லை என செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தெரிவித்திருக்கின்றார்.

வணிகர்கள் மற்றும் மக்களுடன் இணைந்து காவலர்களுக்கு உதவியாக இருக்கும் நோக்கில்தான், ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைப் படிச்சீங்களா?:  சாலையில் உலா வரும் மாடுகள் - விபத்தில் சிக்கும் வாகனங்கள்

எனினும் காவலர்களின் முக்கியப் பணிச்சேவைகளாக இருக்கும் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை எனவும், சட்டத்தை மீறி அந்த அமைப்பில் உள்ள காவலர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குள காவல்நிலைய இரட்டைக் கொலையில் அந்த அமைப்பு பெரும் பங்காற்றியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்ததக்கது.