ஏழை தாயின் மகனுக்கு ஏழைகள் குறித்து தெரியாதது வேடிக்கை – மோடி மீது ஸ்டாலின் தாக்கு!

Share this News:

சென்னை (07 டிச 2020): டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நியாயமானவை என்றும் விவசாய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அனைத்து எதிர் கட்சிகள் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டதில் திமுகவின் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட.ன. இதில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் டிசம்பர் 8 விவசாயிகளின் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய ஸ்டாலின், விவசாயிகளின் போராட்டம் நியாயமானது., அவர்கள் வெற்றியுடனேயே போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வருவார்கள் . எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் மோடி அரசு புதிய சட்டங்களை கொண்டு வருவது ஆபத்தானது.

தான் ஒரு ஏழை தாயின் மகன் என்ற மோடியின் கூற்றையும் கேலி செய்த ஸ்டாலின், “ஒரு ஏழை தாயின் மகன் என்பதால், நீங்கள் மற்ற ஏழைக் குழந்தைகளை (விவசாயிகள்) மீது வன்மம் கொள்வது நியாயமா?” என்று கூறினார். மான் கி பாத் உரையில் வாக்குறுதியளிக்கப்பட்ட பொருட்களுக்கான குறைந்தபட்ச விலைக்கு விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

எடப்பாடி அரசையும் சாடிய ஸ்டாலின். முதலமைச்சர் பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என்று முன்னிலைப்படுத்திக் கொண்டு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருவதாக ஸ்டாலின் கூறினார்.

இதற்கிடையில், தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் டிசம்பர் 8 விவசாயிகளின் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல காங்கிரஸ், சிபிஐ (எம்), திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாடி கட்சி மற்றும் டிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகளும் விவசாயிகளின் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


Share this News:

Leave a Reply