அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் – ஆனால் ட்விஸ்ட் இருக்காமே!

ஈரோடு (01 பிப் 2023): அதிமுக இபிஎஸ் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதேபோல அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளிப்போம். அவர்கள் வேட்பாளரை அறிவித்ததும் எங்களது வேட்பாளரை திரும்பப் பெற்றுக்கொள்வோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அதிமுக இருந்தது. கடந்த தேர்தலில் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தலில் போட்டியிடும் உரிமை உள்ளது. அந்த வகையில் பாஜக தேர்தலில் போட்டியிட விருப்பம் இருந்தால் அவர்களுக்கு ஆதரவளிப்போம்.

பாஜக போட்டியிடவில்லை எனில் செந்தில் முருகன் உறுதியாக போட்டியிடுவார். ஆனாலும் இரட்டை இலை முடங்குவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன்.

பழனிசாமி தரப்பு என்னிடம் வந்து ‘பொது வேட்பாளரை’ நிறுத்துவது குறித்து கையொப்பம் கேட்டால் நான் கையெழுத்து இடுவேன். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை அதிமுகவிற்கு கிடைக்கவில்லை என்பதற்கு நான் காரணமில்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன். அதே நிலை தான் இன்றைக்கும். அவர்கள் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் எனச் சொல்லி ஏ.எம்.பி ஃபார்மில் கையொப்பம் கேட்டால் உறுதியாக இரட்டை இலை சின்னத்திற்கு நான் கையெழுத்திடுவேன்” எனக் கூறியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

இந்துத்துவாவினர் நடத்திய ஊர்வலத்தில் மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல்!

பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள்,...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...