வங்கக்கடலில் புயல் சின்னம்!

சென்னை (06 டிச 2022): வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மாலைக்குள் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அப்போது காற்று தமிழகம் மற்றும் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த புயல் புதுச்சேரி மற்றும் சென்னை இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்: