கோலப் பெண்கள் கைது காரணம் வேறு – கமிஷனர்!

Share this News:

சென்னை (02 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போட்ட பெண்கள் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பெண்கள் கோலம் போட்டதற்காக கைது செய்யப்படவில்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கோலம் போடும் போராட்டத்திற்கு அனுமதி வேண்டும் என்று காவல்துறையிடம் அவர்கள் கேட்டபோது காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அதே நேரம் கோலம் போட்டதை, காவல்துறை தடுக்கவும் இல்லை. அவர்கள் ஏற்கனவே ஏழெட்டு, கோலங்கள் போட்டு விட்டனர். மற்றவர்கள் வீடுகள் முதற்கொண்டு பல இடங்களிலும் அவர்கள் அப்படி கோலம் போட்டனர். ஆனால், ஒரு வீட்டில் ஏற்கனவே அந்த வீட்டுக்காரர்கள் போட்ட கோலத்தின் பக்கத்தில், NO CAA என்று இவர்களாக சென்று எழுதி வைத்தனர்.

எனவே அந்த வீட்டுக்காரர்கள் அவர்களிடம் தகராறு செய்தனர். இந்த விஷயம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்துதான் காவல்துறை அங்கு சென்று கோலம் போட்டவர்களை அங்கிருந்து கிளம்பிச் செல்ல வற்புறுத்தியது. ஆனால் காவல்துறை பேச்சை கேட்காமல் காவல் துறைக்கு எதிராகவே கோஷமிட தொடங்கினர். இதையடுத்து தான் அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.” என்று தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply