கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு!

176

சென்னை (25 ஜூன் 2020): திமுக எம்பி கனிமொழி வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெற்ற் நிலையில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை சிஐடி காலனியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மகளும், தூத்துக்குடி திமுக எம்.பி-யுமான கனிமொழி வீட்டிற்கு தினமும் ஒரு தலைமை காவலர் மற்றும் 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை இரவோடு இரவாக தமிழக காவல்துறை திரும்ப பெற்றது. திமுக எம்.பி கனிமொழிக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லாததாலும், கொரோனா காலத்தில் காவல்துறையின் தேவை அதிகரித்துள்ளதாலும் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைப் படிச்சீங்களா?:  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை!

கனிமொழி வீட்டிற்கு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

-ஆசாத்