அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் – போஸ்டரால் பரபரப்பு!

மதுரை(28 ஜூன் 2022): அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் நீக்கம் செய்யப்பட்டதாக ஒபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ் க்கும் இபிஎஸ் க்கும் இடையே ஒற்றை தலைமை போட்டி நிலவி வருகிறது. இது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏறப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இபிஎஸ் இன் ஒற்றை தலைமை முயற்சிக்கு எதிராக ஒபிஎஸ் தேர்தல் ஆணையத்தை நடியுள்ளார்.

இதற்கிடையே ஒபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்டுள்ள போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி, கேபிமுனுசாமி,ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் என கூறப்பட்டுள்ளது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...