விஜயகாந்த் மனைவி பிரேமலதா மருத்துவமனையில் அனுமதி!

144

சென்னை (28 செப் 2020): விஜயகாந் மனைவி பிரேமலதா கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளார் விஜயகாந்துக்கு சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், பூரண உடல்நலத்துடன் உள்ள விஜயகாந்த், இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்ப உள்ளார். அடுத்த வாரத்தில் இருந்து கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆன்-லைனில் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தேமுதிக பொருளாளரும், அவரது மனைவுயுமான பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்திருந்தார்.

இதைப் படிச்சீங்களா?:  நடிகை குஷ்பூ கைது!

இந்தச் சூழலில், கொரோனா தொற்றிலிருந்து விஜயகாந்த் குணமடைந்துவிட்டதாகவும், 28ஆம் தேதி (இன்று) மாலை அவர் வீடு திரும்பவிருப்பதாகவும் தேமுதி துணைச் செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.