ரஜினி திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

160

சென்னை (17 அக் 2020): ராகவேந்திரா திருமண மண்டப சொத்துவரி குறித்த வழக்கை திரும்ப பெறுவதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி கோரியுள்ளது. இந்நிலையில் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு ரூ.6.5 லட்சம் சொத்துவரி செலுத்த கூறிய நோட்டீசை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் சென்னை மாநகராட்சி நோட்டீஸூக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்ப பெறுவதாக நடிகர் ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  சாலையில் உலா வரும் மாடுகள் - விபத்தில் சிக்கும் வாகனங்கள்

முன்னதாக இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிமன்ற நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் என ரஜினிகாந்த் தரப்புக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.