சிஏஏ குறித்து பேச்சுவார்த்தை – ரஜினி பதில்!

சென்னை (05 மார்ச் 2020): சிஏஏ விவகாரத்தில் பிரதமர் மற்றும் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய அமைப்பினரிடம் கூறியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி பெயர் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு கூட்டம் முடிந்து ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார்.

பின்பு செய்தியாளர்களிடம்பேசிய ரஜினி, “சிஏஏ விவகாரத்தில் பிரதமர் மற்றும் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய அமைப்பினரிடம் கூறினேன். பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னால் முடிந்தவரை உதவி செய்வதாகவும் கூறினேன்.

கட்சி தொடங்குவது பற்றி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை ஏமாற்றமே. திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னர் கூறுகிறேன்.” என்றார்.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...