அரசியலுக்கு வருவதாக நான் சொல்லவே இல்லை – ரஜினி விளக்கம்!

சென்னை (12 மார்ச் 2020): நான் 2017 க்கு முன்பு அரசியலுக்கு வருவதாக சொல்லவே இல்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார். இந்நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், “25 வருடமாகவே அரசியலுக்கு வருவதாக என் மீது அவதூறு பரப்புகிறார்கள். நான் அப்படி எப்போதுமே சொல்லவில்லை. எதுவானாலும் அவன் கையில் உள்ளது என்று மட்டுமே கூறியுள்ளேன்.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டு, கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில்தான் அரசியலுக்கு வருவேன் என்றேன். மேலும் சிஸ்டம் சரியில்லை அதனை சரி செய்ய வேண்டும். என்பதால் அரசியலுக்கு வருவேன் என்று கூறினேன்.” என்று ரஜினி தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்: