அதிமுக மீது ராமதாஸ் பாய்ச்சல்!

Share this News:

தருமபுரி (12 டிச 2021): தருமபுரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை தலைவரும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசும் போது கூறியதாவது:

பெரும்பாலான சமுதாயங்கள் இடஒதுக்கீடு வந்தது தவறு என கூறி உச்சநீதி மன்றத்தில் தடையாணை பெற முயற்சி மேற்கொள்கின்றன. ஆனால் தற்போதைய திமுக அரசு அதை அமல்படுத்த அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது பாராட்டுக்குரியது. இந்த அரசு, மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியும் வருகிறது.

இனி நாம், எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் இந்த மாவட்டத்தில்தான் அதிசயமான நிகழ்வு நடந்தது. இதே மாவட்டத்தில் தான் கேவலமான நிகழ்வும் நடந்தது. கடந்த தேர்தலில் கூட்டணி தர்மமே இல்லாமல் போனது. பாமக தலைவர் ஜிகே மணி, மூன்று நாட்கள் தொகுதிக்குள் போக முடியவில்லை. பாமகவை வீழ்த்த வேண்டும் என்று எதிரிகளோடு கைககோர்த்துக் கொண்டு தோற்கடிக்கும் வேலைகளை செய்து வந்தனர்.

இது என்ன கூட்டணி? பெரியார் போல சொன்னால் வெங்காய கூட்டணி. பாமகவை தண்ணீர் விட்டு வளர்க்கவில்லை இந்த இயக்கத்தை கண்ணீர் விட்டு வளர்த்தோம். நாம் தமிழகத்தை ஆள வேண்டும். வரும் தேர்தலில் 70 முதல் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றால் நாம் ஆட்சியில் அமரலாம்”


Share this News:

Leave a Reply