மாணவர் கையில் கல் – பொய் சொன்ன ஊடகங்கள் – உண்மை பின்னணி வேறு!

Share this News:

புதுடெல்லி (19 பிப் 2020): ஜாமியா மில்லியா பல்கலைக்கழத்தில் போலீசார் கொடூர தாக்குதல் நடத்தியபோது, மாணவர் ஒருவர் கையில் கல் வைத்திருந்ததாக இந்தியா டுடே பொய் தகவலை வெளியிட அது என்ன என்பதை ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற ஊடகம் வெளிக் கொண்டு வந்துள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 15ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற போராட்டம் போலீசாரின் தாக்குதலால் வன்முறையாக மாறியது. அந்த வன்முறையில் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு காவல்துறையினர் தீவைத்தனர். அதுமட்டுமின்றி போலிஸார் ஜாமியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இந்த தாக்குதல் நடைபெற்று ஒருமாதத்திற்குப் பிறகு போலிஸார் மாணவர்களை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த பல மாணவர்களை, போலிஸார் லத்தியால் தாக்குவது பதிவாகியுள்ளது. அவர்கள் உண்மையில் போலிசார்தானா அல்லது குண்டர்களா? என்ற கேள்வி எழுந்தது.

மாணவர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்தியதற்கு, நாடு முழுவதும் கடும் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், காவல்துறை கொடுத்த வீடியோவை ‘இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன. அதில் ஒருவரின் புகைப்படக் காட்சியைக் குறிப்பிட்டு அதில் அந்த மாணவர் கையில் வைத்திருப்பது கற்கள் எனவும் அவர்தான் ஜாமியா துப்பாக்கிச் சூட்டில் காயமானவர் என்றும் பலர் போலிச் செய்திகளை பரப்பி வந்தனர். இந்துத்வா கும்பல் மற்றும் பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் பலரும் மாணவர்களை குற்றம்சாட்டினர்.

ஆனால் உண்மையில் ஊடகஙக்ள் பரப்பப்படும் இந்தத் தகவல் உண்மையானதா எனக் கண்டறிய ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற உண்மை கண்டறியும் செய்தி தளம் ஆய்வுகளை மேற்கொண்டது. அதன்படி ஊடகஙக்ள் வெளியிட்ட வீடியோவின் High Quality வீடியோவை சோதித்துப் பார்த்தது.

அதில், அந்த மாணவர் கையில் வைத்திருந்தது பணப்பையை (Wallet) என்றும் மற்றுமொரு கையில் செல்போனையும் வைத்திருக்கிறார் . இதனைதான் கல் என்று ஊடகங்கள் பொய்யான தகவலை பரப்பியுள்ளது. என ஆல்ட் நியூஸ் (Alt News) உண்மையை வெளியிட்டு அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டது.

எனினும் இந்துத்வா கும்பல் தொடர்ந்து பொய் தகவலை பரப்பி வருவதோடு, ஆல்ட் நியூஸ் (Alt News) ஊடகத்தையும்  விமர்சித்துள்ளது.

ஆனால் உண்மை வெளியே வந்ததால் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன.


Share this News:

Leave a Reply