தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பேரிடர் மீட்புப்படை விரைவு!

சென்னை (06 டிச 2022): தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறுகிறது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும் நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி இது புயலாகவும் தீவிரமடைகிறது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்படுகிறது. இந்த பெயரை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் இன்று விரைந்துள்ளனர். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...