சாத்தான்குளம் தந்தை, மகன் உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்த உறவினர்கள்!

132

தூத்துக்குடி (25 ஜூன் 2020): சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த தந்தை மகன் உடல்களை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் கஸ்டடியில் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு - அரசியல் புள்ளிகளை பீதியில் ஆக்கும் கொரோனா!

மேலும் உயிரிழந்த உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்த நிலையில் பேச்சுவார்த்தைக்குப்பின் உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

-ஆசாத் காமில்