சென்னையை தவிர சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு!

சென்னை (23 மே 2020): சென்னை பெருநகரம் தவிர, தமிழகம் முழுவதும் நா‌ளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள், நா‌ளை முதல் கா‌லை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுவதாகவும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  உற்சாகம் இழந்த பெருநாள் - நாகூர் தர்காவில் கூட்டு பிரார்த்தனை!

தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருபவர்களை, பணியமர்த்தக் கூடாது என்றும் முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்களில் குளிர்சாதன வசதியை உபயோகப் படுத்தக் கூடாது என்று தெரிவிக்‍கப் பட்டுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க தமிழக அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.