அர்ஜுன் சம்பத் மீது எஸ்டிபிஐ போலீசில் புகார்!

கோவை (05 மார்ச் 2020): அவதூறு பரப்பி கலவரத்தை தூண்ட முயல்வதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது எஸ்டிபிஐ கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட செயலாளர் உசேன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இதனை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்சுக்கு சென்று அங்குள்ள பாதிரியாரை மிரட்டியதாகவும், இந்த இடத்தில் கபாலிஸ்வரர் கோவில் உள்ளது என்று பொய்யான தகவலை கூறியுள்ளார்.

இது அந்த மத மக்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் அர்ஜுன் சம்பத் மீது தவறான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு களங்கம் விளைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: