கொரோனா கொடூரம் – தாயை வீதியில் தவிக்க விட்ட மகன்கள்!

193

திருச்சி (14 ஜூலை 2020): கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தால் பெற்ற தாயை வீதியில் வீதியில் தவிக்க விட்டுள்ளனர் இரண்டு மகன்கள்.

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார்.பி.டி நகரைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் குமார் தன்னுடன் இருந்த தாயை வீட்டின் வெளியே தனியே விட்டுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

வீட்டின் வெளியே தனியாக இருந்த அவரது 70 வயது தாய் சரோஜாவை அக்கம் பக்கத்திலிருந்த வீட்டுக்காரர்கள் உணவளித்து இரண்டு நாட்களாக கவனித்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் சரோஜாவை அவரது மூத்த மகன் ராஜா வீட்டுக்கு அழைத்து வந்து விட்டு சென்றனர்.

இதைப் படிச்சீங்களா?:  நடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி - அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு!

ஆனால் ராஜாவும் தாயை வீட்டுக்குள் ஏற்கவில்லை. அவரும் தாயை நடுரோட்டில் தவிக்க விட்டு தன் மனைவியுடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் சரோஜா மயக்கமடைந்தார். இதனைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மூதாட்டி சரோஜாவை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இவ்விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.