எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐ.சி.யூவில் கொண்டாட்டம்!

250

சென்னை (07 செப் 2020): பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் அவரது மனைவியுடன் ஐ.சி.யூ.வில் திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

எஸ்பிபி கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ,உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதியின் 51வது திருமண நாள் என்பதால், எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி சாவித்ரி, தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.சி.யூ.வில் வைத்து டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதி கேக் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதைப் படிச்சீங்களா?:  மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!