ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் அட்டவணை!

Share this News:

சென்னை (31 மே 2020): கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது 01.6.2020 முதல் தமிழகத்தில் ரயில் போக்குவரத்தை துவக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சிறப்பு ரயில்களின் கால அட்டவணை

வண்டி எண் 02636 மதுரை – விழுப்புரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 02635 விழுப்புரம் – மதுரை சிறப்பு ரயில் விழுப்புரத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 09.20 மணிக்கு மதுரை வந்து சேரும்.இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, அரியலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 4 குளிர்சாதன வசதி இருக்கை பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மின்மோட்டார் பெட்டிகள் இணைக்கப்படும்.

வண்டி எண் 02627 திருச்சி – நாகர்கோவில் சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பின்பு மதுரையிலிருந்து காலை 08.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 02628 நாகர்கோயில் – திருச்சி சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு பின்பு மதுரையிலிருந்து இரவு 07.25 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு திருச்சி சென்று சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இருக்கை வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 8 பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்படும்.


Share this News: