ஜவாஹிருல்லா, வேல்முருகன் கோரிக்கைகள் ஏற்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Share this News:

சென்னை (28 ஆக 2021): எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா, வேல்முருகன் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுகிறது. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று அறிவித்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (28/08/2021), மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனி தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், காங்கிரஸ், விசிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வேல்முருகன், ஜவாஹிருல்லாவின் கோரிக்கையினை ஏற்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுகிறது.

இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இனி இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் எனக் கூற வேண்டாம்; இலங்கைத் தமிழர்களுக்கு நாம் இருப்போம்” என்றார்.


Share this News:

Leave a Reply