சென்னை (14ஜூலை 2022): கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் கொரோனா பாதிப்பால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் சி.டி
ஸ்கேன் பரிசோதனைக்காக சென்னை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின் சென்ற நிலையில் தற்போது அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.