ஆ.ராசாவுக்கு ஸ்டாலின் குட்டு!

சென்னை (27 மார்ச் 2021): தி.மு.க.வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆ.ராசா முதல்வர் குறித்து பேசிய பேச்சு அடங்கிய காணொலி, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பெரம்பலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆ.ராசா முதலமைச்சர் பழனிசாமியை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை முதல்வர் குறித்து நான் பேசியது வெட்டி ஒட்டி சித்தரிக்கப்பட்டது என கூறி உள்ளார்.

இதற்கிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

தி.மு.க.வினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி – ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது என கூறி உள்ளார்.

ஹாட் நியூஸ்:

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...