குர்ஆன் குறித்து பரங்கிப்பேட்டை பத்தாம் வகுப்பு மாணவி எழுதிய ஆங்கில நூல் வெளியீடு!

பரங்கிப்பேட்டை (26 டிச 2022): பரங்கிப்பேட்டை மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி அமீரா (த/பெ) பாரூக் எழுதிய Scientific facts in Islam என்னும் ஆங்கில நூல் கடந்த 24.12.2022 சனிக்கிழமை அன்று புதுச்சேரி, லாஸ்பெட்டில் உள்ள விவேகானந்தா பள்ளியில் புதுவை குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

பரங்கிப்பேட்டை மாணவி செல்வி. அமீரா ஃபாருக் என்பவர் 10ஆம் வகுப்பு படிக்குபோது ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் கொரோனோ காரணமாக இரண்டு வருடங்கள் பதிப்பிக்க இயலாமல் இருந்தது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இதே மாணவி ஆறாம் வகுப்பு பயிலும்போது நடைபெற்ற கட்டுரை போட்டியில் Darwin’s theory of evolution in Galapagos island என்ற தலைப்பில் சிறப்பு கட்டுரை ஒன்றினை ஆங்கிலத்தில் எழுதி ரூ.5000 பரிசு பெற்றுள்ளார் என்பதும் குறிக்கத்தக்கது.

குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய மாணவி செல்வி அமீரா பாரூக் Way to Rayyan என்ற இஸ்லாமிய வழிகாட்டி மையம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகிறார் என்பதும் சொல்லத்தக்கது.

குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தலைவர் கலைமாமணி. முனைவர் அ. உசேன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்புமிக்க விழாவில் மேனாள். சட்டப்பேரவை தலைவரும், புதுவை கம்பன் கலையரங்கத்தின் செயலருமான திரு. வெ.பொ சிவக்கொழுந்து அவர்கள் நூலின் முதல் பிரதியை வெளியிட, எழுத்தாளரின் பாட்டனார் ஜனாப். U. நஜீர் உபைதுல்லாஹ் பெற்றுக்கொண்டார்.

நூலாசிரியர் செல்வி அமீரா பாரூக் மேடையில் உடனிருந்தார். இம்மாணவி பரங்கிப்பேட்டை பெரும்புலவர் என்று பிரசித்தி பெற்ற காதர் அலி மரைக்காயர் வழித்தோன்றல் ஆவார்.

ஹாட் நியூஸ்:

குவைத்தில் நீடிக்கும் கடும் குளிர்!

குவைத் (25 ஜன 2023): குவைத்தில் கடும் குளிர் நீடிக்கிறது. பல இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. குவைத் முழுவதும் கடும் குளிர் நிலவத் தொடங்கியது. இரவுகளில், பாலைவனப் பகுதிகளில் காற்றின்...

காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை திடீர் நிறுத்தம்!

ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று...

55 ரியால்களுக்கு விமான டிக்கெட் – சவூதி அரேபிய விமான நிறுவனம் வழங்கும் ஆஃபர்!

ரியாத் (25 ஜன 2023): சவூதியின் பட்ஜெட் விமான நிறுவனமான ஃப்ளை அடீல், சவுதி அரேபியாவில் வெறும் 55 ரியால்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் ஆஃபரை அறிவித்துள்ளது. மதீனா உட்பட சவுதிக்குள் உள்ள பல்வேறு...