பெரியாரின் பேரனோ எனத் தோன்றுகிறது – சூர்யாவை தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்!

Share this News:

சென்னை (14 செப் 2020): நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் அறிக்கை ‘அவரை பெரியாரின் பேரனோ என எண்ணத் தோன்றுகிறது’ என்று சமூக வலைதளங்களில் கொண்டாடுகின்றனர்.

நீட் தேர்வு தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்தபடி உள்ள நிலையில் நடிகர் சூர்யா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்…அதில் “சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீ வைக்கற நீட் தேர்வு.. அனைவருக்கும்‌ சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம்‌, ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாகக் கொண்டு வருகிறது.

மகாபாரத காலத்து துரோணர்கள்‌ ஏகலைவன்களிடம்‌ கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள்‌. நவீனகால துரோணர்கள்‌ முன்னெச்சரிக்கையுடன்‌ ஆறாம்‌ வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்‌ என்று கேட்‌கிறார்கள்” என்பதாக நீண்ட அந்த கட்டுரையில் நீதித்துறையை நேரடியாகவே சாடினார்.

சூர்யாவின் இந்த அறிக்கை தமிழகத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை ஒவ்வொரு தந்தையின் குமுறல் என்பதாகவும், சினிமா உலகின் பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்களே அதிகாரத்திற்கு பம்மி கொண்டிருக்கும்போது, சூர்யாவின் இந்த துணிச்சல் பாராட்டத்தக்கது , இது ஒரு தன்னெழுச்சியான தைரியம் மிக்க செயல்பாடு.. சூர்யாவின் சில வார்த்தைகள் பெரியாரின் பேரனோ என என்னத் தோன்றுகிறது. என்பதாகவும் சூர்யாவின் அறிக்கை சமூக வலைதளங்களில் கொண்டாடப்படுகிறது.


Share this News:

Leave a Reply