தங்க கடத்தல் – ஸ்வப்னா சுரேஷ் கைது!

Share this News:

திருவனந்தபுரம் (19 ஜூலை 2020): 30 கிலோ தங்க கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக முகவரியை தவறாக பயன்படுத்தி 30 கிலோ தங்கத்தினை கடத்த நடந்த முயற்சியை கேரள சுங்கத்துறையினர் 30.6.2020 கண்டறிந்து முறியடித்தனர்

இது சம்பந்தமாக சரித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது, தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியவரும், கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் வேலை செய்த ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவானார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு முகமையிடம் ( என் ஐ ஏ) மத்திய அரசு வழங்கியது.

இன்று ஸ்வப்னா சுரேஷை பெங்களூருவில் என் ஐ ஏ கைது செய்து கொச்சிக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Share this News: