ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவாக தமிமுன் அன்சாரி தேர்தல் பிரச்சாரம்!

நாகை (27 மார்ச் 2021): திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தமிமுன் அன்சாரி தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகப்பட்டினத்தில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

சிதம்பரம், காட்டு மன்னார்குடி, பன்ருட்டி ஆகிய இடங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார். நாளை (28-ந் தேதி) மற்றும் 29-ந் தேதிகளில் தமிமுன் அன்சாரி சென்னையில் பிரசாரம் செய்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

30-ந் தேதி திருச்சியிலும், 31-ந் தேதி திருவாரூர், மன்னார்குடி, மற்றும் மமக தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவாக பாப நாசத்திலும், ஏப்ரல் 2-ந் தேதி நெல்லையிலும், 3 மற்றும் 4-ந் தேதிகளில் கோவையிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...