அதிர்ச்சி அளிக்கும் தமிழக அரசின் முடிவு – திருமாவளவன் கருத்து!

Share this News:

சென்னை (03 ஆக 2020): மும்மொழிக் கொள்கையை ஏற்காதது குறித்து முடிவெடுத்த தமிழக அமைச்சரவையின் முடிவை வரவேற்றுள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிற தீங்குகள் குறித்து அமைச்சரவை முடிவெடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாக,தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மும்மொழிக்_கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்திருப்பதை விசிக சார்பில் வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

அதே வேளையில், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிற தீங்குகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசியக் கல்விக்கொள்கையை முற்றாக மறுதலிக்க வேண்டும்.

உடனடியாக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தை நடத்தி மக்கள்விரோத சனாதன கல்விக்கொள்கையைத் திரும்பப் பெற வேண்டுமென மைய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- என தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply