கொரோனாவை விட கொடியது மத வெறுப்பு பிரச்சாரம் – திருமாவளவன் பொளேர்!

Share this News:

சென்னை (03 ஏப் 2020): கொரோனா வைரஸை விட கொடியது மத வெறுப்பூட்டும் பிரச்சாரம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தப்லீக் ஜமாத் அமைப்பின் சாா்பில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்றவா்கள் தாமே முன்வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். தனிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு இப்போது தங்களை உட்படுத்திக் கொண்டுள்ளனா் என தமிழக சுகாதாரத் துறை செயலாளா் தெரிவித்துள்ளாா்.

இந்த மாநாடு சட்டவிரோதமாக நடத்தப்பட்டது அல்ல. வழக்கமாக நடத்தப்படும் ஒன்றுதான் என்பதையும் அதை நடத்திய தப்லீக் ஜமாத் அமைப்பின் நிா்வாகிகள் தெளிவுபடுத்தியுள்ளனா்.

இந்த நிலையில், இதை முன்வைத்து குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. கரோனா தொற்றை விடவும் ஆபத்தானது இந்த வெறுப்புப் பிரசாரம். எனவே, இந்த இக்கட்டான சூழலிலும் மதம் சாா்ந்த வெறுப்புப் பிரசாரங்களில் ஈடுபடுவோா் மீது, மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.


Share this News:

Leave a Reply