தமிழக பாஜக தலைவராக தலித்தை நியமித்தது ஏன்? – திருமாவளவன் பகீர் கேள்வி!

Share this News:

சென்னை (23 மே 2020): தமிழக பாஜக தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த முருகனை நியமித்தது ஏன்? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலித் சமூக மக்களுக்காக போராடி வருவது அனைவரும் அறிந்ததே.

சமீபகாலமாக திமுக தலைவர்கள் பேசும் சில பேச்சுக்கள் தலித் சமூகத்தினரின் மனம் நோகும்படி உள்ளது.

இந்நிலையில்தான் தலித் சமூகத்தினரை இழிவாகப் பேசியதாக கூறி திமுக ஆர்.எஸ் பாரதி சனிக்கிழமை அன்று கைதாகி ஜாமீனில் விடுதலையானார். மேலும் சமீபத்தில் தயாநிதி மாறன் பேசிய பேச்சும் விசிகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதற்கு திருமாவளவனும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த முருகன் நியமிக்கப்பட்டது குறித்து திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், “சகோதரர் முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது, அவர் #தலித்சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா? அல்லது கட்சியை வழிநடத்தும் தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா? இதுபற்றி பாஜக விளக்கம் தருமா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Share this News: