கல்லூரி மாணவிகளுக்கு போதைப் பொருள் கொடுத்து வீடியோ எடுத்த கும்பல் கைது!

Share this News:

மதுரை (11 மே 2020): பொள்ளாச்சி சம்பவத்தைப் போல கல்லூரி கல்லூரி மாணவிகளுக்கு போதை பொருள் கொடுத்து சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தல்லாகுளம் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.. அதற்கு அருகில் ரெஸ்டாரெண்ட் மற்றும் மொபைல் போன் கடையும் உள்ளது.

இங்குள்ள மூன்று இளைஞர்கள் அக்கல்லூரி மாணவிகளை வலையில் வீழ்த்தியுள்ளனர். அவர்களை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று கூல்ட்ரிங்ஸில் போதைப் பொருள் கலந்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதனை வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அந்த இளைஞர்களின் பேச்சில் மயங்கிய மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேருமே மதுரையை சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து போலீசார் அளித்துள்ள தகவல் திடுக்கிட வைக்கிறது. சம்பந்தப்பட்ட 3 பேரும் தல்லாகுளம் பகுதியில் ரெஸ்டாரண்ட், செல்போன் கடை நடத்தி வருகிறார்கள்.. அந்த பகுதியில்தான் காலேஜும் உள்ளது.. அதனால் அங்கு படித்து மாணவிகள், ஹாஸ்டல் மாணவிகளை குறி வைத்து, அவர்களின் செல்போன் நம்பர்களையும் தேடி பிடித்துள்ளனர். இதில் காலேஜ் தவிர, ஸ்கூல் பிள்ளைகளும் அடக்கம். 3 பேரில் ஒருவர் செல்போன் கடை வைத்திருப்பதால், செல்போன் ரிப்பேர் என்று வரும் மாணவிகளின் நம்பர்களையும் எளிதாக எடுத்து வைத்து கொள்வார்கள்.

. பிறகு குறிப்பிட்ட அந்த நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, போனிலும் பேச்சை ஆரம்பிப்பார்கள்.. சில பெண்கள் இந்த பேச்சில் விழுந்துவிட்டாலோ, அல்லது நண்பர்கள் என்று நினைத்து பழக ஆரம்பித்தாலோ அவர்களை நேரில் வரவழைத்து ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்து போய் ட்ரீட் என்ற பெயரில் விருந்து வைத்துள்ளனர்.. கை செலவுக்கு பணமும் தந்துள்ளனர்.

இதையெல்லாம் பார்த்து சில பெண்கள் சகஜமாக பேச தொடங்கியதும், அவர்களை ஊர் ஊராக அழைத்து சென்று ஜாலியாகவும் இருந்துள்ளனர். இதன்பிறகுதான் கூல் டிரிங்ஸில் போதை மருந்துகளை திருட்டு தனமாக கலந்து தந்ததுடன், அப்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதனையும் வீடியோவாக ரிக்கார்ட் செய்துள்ளனர்..

திரும்பவும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்துள்ளனர். இப்படி பல இளம்பெண்களை இவர்கள் நாசம் செய்ததாக கூறப்படுகிறது.. அது மட்டுமில்லை.. ஹாஸ்டல்லில் இருக்கும் சில மாணவிகளுக்கு சாப்பாடு பார்சல் தருவதுபோல, மது பாட்டிலையும் தந்து, அவர்களையும் தங்கள் வலையில் விழ வைத்துள்ளனர்… இப்போதைக்கு 3 பேரைதான் கைது செய்துள்ளனர்.. இன்னும் யாரெல்லாம் இதில் அடங்கி உள்ளனரோ? எத்தனை பெண்கள் சீரழிக்கப்பட்டனரோ என்ற லிஸ்ட் தயாராகி வருகிறது.

கடந்த 3 வருஷமாகவே இந்த வேலையில்தான் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனராம்.. இப்போது லாக்டவுன் என்பதால் காலேஜ், ஹாஸ்டல் லீவு என்றாலும் போனை போட்டு அவர்களுக்கு தொல்லை தந்து வந்ததாகவும் தெரிகிறது.

காலேஜ், பள்ளி மாணவிகள் எப்பவுமே சோஷியல் மீடியாவில் இருக்கவும், அவர்களை கவிழ்க்கவே காம்போ ஆபர் சலுகைகள் என்ற பெயரில் விளம்பரங்களும் செய்துள்ளனர். எதிர்பார்த்தபடியே ஏராளமான பெண்கள் இவர்களை தொடர்பு கொள்ளும்போது, அவர்களையும் சிக்க வைத்து சீரழித்துள்ளனர்” என்றனர்..

இவ்விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News: