சூதாட்டமும் மகாபரதமும் – திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை (13 டிச 2022): சென்னை வள்ளுவர்கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், திருவள்ளுவர், பெரியாரைத் தொடர்ந்து அம்பேத்கருக்கும் காவி ஆடை, திருநீறு மற்றும் குங்குமம் இட்டு அவமதிக்கும் அமைப்புகளைக் கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவள்ளுவர், பெரியார், அண்ணா போன்றோரைக் கொச்சைப்படுத்திய சங்பரிவார் கும்பல் தற்போது அம்பேத்கரையும் கொச்சைப்படுத்தியுள்ளது. அவரது நினைவு நாளன்று அவரது உருவப்படத்திற்கு திருநீறு இட்டு குங்குமம் இட்டு காவி உடுத்தி சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டியுள்ளனர். இது அவருடைய நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் அற்பச் செயல். அவரை இழிவுபடுத்தும் போக்கு. இதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்

சூதாட்டம் இருப்பது நல்லது மகாபாரதத்தில் இருந்தது எனச் சொல்லக்கூடிய அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் பிரச்சனை குறித்து கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்போம்” என்றார்.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....