இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் உயிரை காப்பாற்றிய தமுமுகவினர்!

திருப்பூர் (19 மே 2020): திருப்பூரில் மாமனாரால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிமாறனை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகியை வெட்டிய மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் அருகேயுள்ள, பெருமாநல்லூர் பகுதியை சேர்த்தவர் மணிமாறன். இவர் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் மணிமாறனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மணிமாறனின் தந்தை தண்டபானி மணிமாறனை தட்டிக் கேட்டுள்ளார்.இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி மணிமாறணை மாமனார் தண்டபானி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மணிமாறன் படு காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார்.

தகவலறிந்த தமுமுக நிர்வாகிகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மணிமாறனை உரிய நேரத்தில் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் மணிமாறன் உயிர் காப்பாற்றப்பட்டது.

மேலும் இவ்விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தண்டபானியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமுமுகவினரின் செயல் அப்பகுதியில் பாராட்டை பெற்றுள்ளது. இதுபோல பலமுறை தமுமுகவின் ஆம்புலன்ஸ் சாதி மத பேதமின்றி பலருக்கு உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...