தடுமாறும் தமிழகம் – ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று!

151

சென்னை (25 ஜூன் 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவி ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,56,183-லிருந்து 4,73,105-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,476-லிருந்து 14,894-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685-லிருந்து 2,71,697-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 418 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 16,922 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது இப்படியிருக்க தமிழகம் கொரோனாவை கட்டுப்படுத்தமுடியாமல் தடுமாறி வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் மேலும் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 70,977-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 1,834 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 47,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  ஆன்மீக சுற்றுலா வந்த முஸ்லீம்களை விடுதலை செய்யக்கோரி தமுமுக முற்றுகை போராட்டம் அறிவிப்பு!

இதுவரை 39,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2.236 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 911-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறமை குறிப்பிடத்தக்கது.