பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களை சேர்க்க தடை!

Share this News:

சென்னை (14 ஜூன் 2020): அனுமதி பெறாமல் 11-ம் வகுப்பில் புதிய பாடத்தொகுப்பிற்கு மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலால் 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இயலாத நிலையில் பல்வேறு கோரிக்கைகளை அடுத்து தேர்வை ரத்து செய்து 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தது.

இந்நிலையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. மாணவர் பெற்றோரிடம் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு புகார் வந்துள்ளது. 10-ம் வகுப்புக்கு இன்னும் ரிசல்ட் வெளியிடப்படாத நிலையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தற்போது பள்ளிக்கல்வித்துறை ஒரு தடை உத்தரவை பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Share this News: