தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓட அனுமதி!

Share this News:

சென்னை (22 மே 2020): தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற இடங்களில் நிபந்தனையுடன் ஆட்டோக்‍களை இயக்‍க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக, கடந்த 2 மாதங்களுக்‍கும் மேலாக தமிழகத்தில் பிற வாகனங்களுடன் ஆட்டோக்‍களுக்‍கும் தடை விதிக்‍கப்பட்டது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். எனவே, அவர்களது நிலையைக்‍ கருத்தில் கொண்டு, ஆட்டோக்‍களை இயக்‍க அனுமதி அளிக்‍க வேண்டுமென, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது அரசு ஆட்டோக்‍களுக்‍கு அனுமதி வழங்கியுள்ளது. சென்னையைத் தவிர தமிழகத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் ஆட்டோக்‍கள் மற்றும் ரிக்‍ஷாக்‍களை இயக்‍கலாம் என அரசு இன்று அறிவித்துள்ளது.

காலை 7 மணி முதல், மாலை 7 மணி வரை மட்டுமே இயக்‍க வேண்டும் – ஆட்டோவில் ஒருவர் மட்டுமே பயணிக்‍க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளுடன் ஆட்டோக்‍கள் இயங்க அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது. ஆட்டோக்‍களில் சானிடைசர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் – ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் ஆகிய இருவரும் கட்டாயம் முகக்‍கவசம் அணிய வேண்டும் ஆகிய நிபந்தனைகளும் விதிக்‍கப்பட்டுள்ளன.


Share this News: