பள்ளிகளை திறக்கலாமா? – பெற்றோர்களை அணுக தமிழக அரசு முடிவு!

Share this News:

சென்னை (01 ஜூன் 2020): பள்ளிகளை திறந்தால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்புவார்களா? என்பது குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவல் மற்றும் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமாக இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஜூன், 15 முதல் 25 வரை தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்கிறது.

தேர்வு முடிந்த பின், ஜூலை மாதத்தில் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும். அதன்பின் அப்போதைய சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும்.

இந்நிலையில் பள்ளிகளை திறந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப கூடிய மனநிலையில் இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதால் பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ என பல்வேறு விதமான பள்ளிகளில் இருக்கக்கூடிய நிலையில் பெற்றோர்களுடைய கருத்துக்களை நேரடியாக தொடர்பு கொண்டு கேட்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

அதன்படி தனியார் பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


Share this News: